கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட சபீதன் உதயகுமார் என்ற 20 வயதான தமிழ் இளைஞரை ஹெலிக்காப்டரில் துரத்திச் சென்ற பொலிஸார் பல மைல் தொலைவுக்குச் சென்ற பின்னர் அவரைக் கைது செய்த சம்பவம் ஒன்று புதன்கிழமை பிரம்ரன் நகரில் இடம்பெற்றிருக்கின்றது.
வாகனத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்லும் வழியில் பல இடங்களில் பாதை மாறி வாகனத்தைச் செலுத்திய இளைஞர், விபத்து ஒன்றில் சிக்கிய பின்னர் காரிலிருந்து இறங்கித் தப்பிச் சென்று மறைந்துகொள்வதற்கு முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை 4.30 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றது.