5 வயது சிறுமியை குளியலறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் 155 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட் பெண் ஒருவர், மேலும் பல சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு;ள்ளார்.

7 பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகாத புணர்ச்சி ஆகிய குற்றச்சாட்டுகளில் எலிஸபத் ஹாவே (43) என்ற இப்பெண்ணை குற்றவாளியென அமெரிக்காவின், மேற்கு வேர்ஜீனியா மாநில நீதிமன்றமொன்று கடந்த டிசெம்பர் மாதம் அறிவித்தது.  அதையடுத்து அவருக்கு 155 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இப்பெண் தற்போது மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் மீதான பாலியல் ஈர்ப்பை கொண்டுள்ள பெக்ஸ் என்ற நபருக்கு ஹாவே துஷ்பிரயோக வீடியோக்களை அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

பெக்ஸ் மற்றும் ஹாவே ஆகியோரிடையே 2018 நவம்பரில் சமூகவலைத்தளத்தின் ஊடாக பழக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், சிறுமியை  துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவாக பதிவு செய்து பெக்ஸுக்கு 2019 பெப்ரவரியில் பேஸ்புக் மெஸஞ்சர் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், துப்பரியும் நிபுணர் ஒருவர், இனந்தெரியாத நபரொருவர் வைத்திருந்த பருவம் எய்தாத சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்படும் வீடியோவை பார்த்ததுடன், ஹாவேயின் பேஸ்புக் கணக்கை சோதனையிட அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில், இனந்தெரியாத நபரொருவர் பருவம் எய்தாத சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்படும் வீடியோவை பார்த்ததுடன், ரண்டெல் ஹாவேயின் பேஸ்புக் கணக்கை சோதனையிட அனுமதிப்பெற்றதாக துப்பறியும் நிபுணர் ஒருவர் கூறினார்.

அதன்போது, 5 அல்லது 6 வயதான சிறுமி ஒருவரை எலிஸபெத் ஹாவே பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இரண்டு வீடியோக்களை கண்டுபிடித்ததாக துப்பறியும் நிபுணர் தெரிவித்தார்.

மற்றொரு வீடியோவில் அதே சிறுமியும், ரண்டெல் பெக்ஸும் நிர்வாணமாக இருப்பதாகவும், எனினும், ரண்டெல் பெக்ஸ் அவரை துஷ்பிரயோகம் செய்தாரா என்பதை தெரியவில்லை என்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தான் ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த மாதம், ரண்டெல் பெக்ஸ் ஒப்புக்கொண்டார். இக்குற்றத்துக்காக அவருக்கு எதிர்வரும் நவம்பர் 9 ஆம்திகதி தண்டனை விதிக்கப்படவுள்ளது.

 

 

Share.
Leave A Reply