இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
09 பெண் மூத்த பெண் பொலிஸ் பரிசோதர்களின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளதுடன், அதிலிருந்து ஒருவரை பிரதி பொலிஸ்மா அதிபராக தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பிம்ஷானி ஜசிங்கராச்சி, பிரதி பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜசிங்கரச்சி 1997 ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகராக சேவையில் இணைந்தார். பின்னர் 2017 இல் பொலிஸ் அத்தியட்சகராக தரமுயர்த்தப்பட்டார்.
பொலிஸ் துறையில் உயர் பதவியை வகித்த முதல் பெண் அதிகாரி சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் பிரமிளா திவாகர ஆவார்.
இவர், பெண் அதிகாரி இவர் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் தரத்தில் இருந்த போது, பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பெண் அதிகாரியை பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் தீர்மானத்ததை முதல் முறையாக தற்போது பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.