கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவலை தெரியப்படுத்தினர்.

இதனை அடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், பொதுமக்கள் ஒன்றிணைந்து, கரை ஒதுங்கிக் கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர்.

கல்முனையில் – 02 கிராமசேவையாளர் பிரிவில் வசித்து வந்த 78 வயதுடைய சின்னத்தம்பி நேசம்மா என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சடலம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply