தேங்காய்களுக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை முதல் இவ்விலைகள் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமான பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த திசாநாயக்கவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
தேங்காய்களின் சுற்றளவுக்கு ஏற்ப அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 13 அங்குலத்துக்கு மேற்பட்ட சுற்றளவு கொண்ட தேங்காய்களின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா ஆகும்.
12 முதல் 13 அங்குலம் சுற்றளவு கொண்ட தேங்காய்களின் அதிகபட்ச சில்லறை விலை 65 ருபா.
12 அங்குலங்களுக்கு குறைவான சுற்றளவு கொண்ட தேங்காய்களின் அதிகபட்ச சில்லறை விலை 60 ருபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .