பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் (செப் 25)திடீர் மாரடைப்பால் காலமானார்.

74 வயதான அவர் இதுவரை 45,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு திரை உலகினரையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந் நிலையில் நடிகர் கமல்ஹாசன் எஸ்.பி.பி உடன் பணியாற்றியது குறித்து மிகவும் உருக்கமான குரல் பதிவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply