மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிகோ சிற்றியில் ஏற்பட்ட கடும் புயலின் பின்னர் அங்குள்ள வடிகான் தொகுதி சுத்தம் செய்யப்பட்டது.
அதன்போது, வடிகான் தொகுதியிலிருந்து ஒரு இராட்சத எலியொன்று துப்புறவு தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.
எனினும், உண்மையில் அது இராட்சத எலி அல்ல, 22 தொன் நிறையுடைய கழிவுகள் ஒன்றுசேர்ந்ததால் உருவாக்கப்பட்ட இராட்சத பொம்மை என பின்னர் கண்டறியப்பட்டது.
‘ஹலோவீன்’ கொண்டாட்டத்துக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த எலியே இவ்வாறு புயலில் அடித்துச் செல்லப்பட்டு வடிகான் தொகுதிக்குள் சிக்கியுள்ளது.
மேற்படி எலி தன்னுடையது என ஈவ்லின் லோபஸ் எனும் பெண் தெரிவித்துள்ளார். இந்த எலி சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் புயலின்போது, வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதை தேடுவதற்கு உதவுமாறு பல தடவை கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் ஒருவரும் உதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.