யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இன்று காலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
37 வயதான அன்ரன் ஜோர்ஜ் இன்று காலை கிணற்றடிக்கு சென்ற போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.