ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்டத்தை தடுப்பதற்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பது தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், சுதந்திர நடமாட்டத்தை தடுப்பதற்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்ஸர்லாந்து அங்கம் வகிக்கவில்லை. ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்டத்தை சுவிட்ஸர்லாந்து ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த சுதந்திர நடமாட்ட அனுமதியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான யோசனைகள் வலதுசாரி சுவிஸ் மக்களின் கட்சியினால் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக சுவிட்ஸர்லாந்தில் நேற்று சர்வஜன வாக்கெடுப்பு நடப்பட்டது.
இதில் பெரும்பான்மையான மக்கள் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளதை நேற்று மாலைவரை வெளியான பெறுபேறுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இத்திட்டத்துக்கு எதிரா க 62 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர் என எஸ்.ஆர்.எவ். அலைவரிசை தெரிவித்துள்ளது.