சண்டிகர்: மச்சினிச்சி, மாமியார், மனைவி.. 3 பேரையும் கொன்று, அந்த 3 பேரின் சடலங்களுடன் உடலுறவு வைத்திருக்கிறது வெறிப்பிடித்த ஒரு மிருகம்!

 

ஹரியானாவில் சோனாபெட் மாவட்டத்தில் பட்டிகல்யாணி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் நூர் ஹாசன்.. 27 வயதாகிறது.

கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 2 குழந்தைகள் பிறந்த பிறகு, திடீரென தன் மனைவி மீது இவருக்கு டவுட் வந்துவிட்டது.. யாருடனோ மனைவிக்கு கள்ள உறவு இருக்கிறது என்று முடிவுக்கே வந்துவிட்டார்..

அதுமட்டுமல்ல, இந்த கள்ள உறவுக்கு அவரது அம்மாவே, அதாவது தன்னுடைய மாமியார், மச்சினிச்சி போன்றோர் உடந்தையாக இருக்கிறார் என்றும் நினைத்துவிட்டார்.

அதனால், எல்லாரையுமே கொன்றுவிடலாம் என்று ஒரு பிளான் செய்தார்.. அதன்படி, கடந்த 5-ம் தேதி போதை பொருளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்..

அதை மனைவிக்கும், மச்சினிச்சிக்கும் கலந்து கொடுத்துவிட்டார்.. போதை என்று தெரியாமல் வாங்கி சாப்பிட்ட மனைவியும், மச்சினியும் மயங்கி விழுந்தனர்..

பிறகு அவர்களை கூர்மையான ஆயுதங்களை எடுத்து வந்து கொலை செய்து விட்டார்.

பிறகு அங்கிருந்து கிளம்பி, கடந்த 8-ம் தேதி புர்ஷாம் கிராமத்தில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டுக்கு போனார்.. உள்ளே நுழைந்ததுமே மாமியாரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த அடையாளத்தை மறைக்க அவர் உடலை எரிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதற்கு பிறகுதான் போலீசுக்கே விஷயம் சென்றுள்ளது.. 3 பேரின் சடலங்களும் எங்கே என்றே தெரியவில்லை.. அதனால் சடலங்களை போலீசார் தேட ஆரம்பித்தனர்.

. இறுதியில், 3 பேரின் சடலங்களும் 3 இடங்களில் கிடந்ததை கண்டெடுத்தனர். அவரது உடல்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

அப்போதுதான், 3 பேரையுமே நூர் ஹாசன் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.. இந்த கொலைகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்றாலும், சடலங்களுடன் உறவு கொண்ட இந்த சம்பவத்தினால், ஹரியானாவே அலறி கிடக்கிறது.

Share.
Leave A Reply