மெக்ஸிக்கோவின் நவோலெடோ பிரதேசத்தில் முதலை மீது அமர்ந்தவாறு நபரொருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்லும் வீடியோ ஒன்று சமூவலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேவேளை, விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவிலுள்ள இரு நபர்கள், சுமார் 8 அடி நீளமான முதலையொன்றை கயிற்றால் கட்டி குளமொன்றிலிருந்து கரைக்கு இழுப்பதைக் காட்டுகிறது.
அடுத்த காட்சியில், பாரிய முதலையை மோட்டார் சைக்கிளில் சமாந்தரமாக வைத்துள்ள நபர் ஒருவர், அதன்மீது அவர்ந்தவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்கிறார்.
இந்த முதலையின் உடல் மற்றும் அதன் வாய்ப்பகுதி மோட்டார் சைக்கிளுடன் பிணைத்துக் கட்டப்பட்டுள்ளதால் எவ்வித ஆபத்துகளும் இன்றி அதனை அந்நபர் கொண்டு செல்கிறார்.
இந்த விவகாரத்துக்கு பெரும்பாலானோர் கடும் கண்டனத்தை வெளியிட்டுவரும் அதேவேளை, வீடியோவிலுள்ள இருவரை அடையாளம் காண மெக்ஸிகோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.