நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 09 ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைக்காக நவம்பர் 09 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Updated story

 

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் 2020 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இம்மாதம் 9 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர்  9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது :

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இம்மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு , ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அதற்கமைய 6 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களுக்கும் , 7 ஆம் திகதி புதன்கிழமை முதல் புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று புலமை பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 48 ஆயிரத்து 72 பேர் சிங்கள மொழி மூலமும் 83 ஆயிரத்து 622 பேர் தமிழ் மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக 2936 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 496 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply