கொழும்பு – கொள்ளுப்பிட்டியின் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் 27 வயதான ஒருவர் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார்.
இதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
குறித்த நால்வரில் ஒருவரிடம் இருந்து இறந்து போனவரின் கையடக்க தொலைபேசி மற்றும் அவரை குத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கடவத்த, பசறை, அஹன்கம மற்றும் களனியைச் சேர்ந்தவர்களாவர் என தெரியவருகிறது.