எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்
உலகிலேயே மிக கவர்ச்சிகரமான பாலினம் எது தெரியுமா? மனித இனத்தைச் சேர்ந்த பெண் இனம்தான்.
பெண்களை பெரும்பாலான ஆண்கள் அவள் உணர்வுரீதியாக பலவீனமானவள் என்றே கருதுகிறார்கள்.
ஆனால் பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை. அவள் அர்த்தத்தோடுதான் ஆசைப்படுவாள். ஒரு பெண், ஒரு ஆணைப் பார்த்து அனுதாபப்படுவது வேறு, ஆசைப்படுவது வேறு.
அவள் ஆசைப்பட்டு வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள விரும்பும் ஆணுக்கு திறமையும், வெற்றியும் மிக தேவை என்று கருதுவாள்.
தீரமும், திறமையும் மிகுந்தவர்களை பெண்கள் விரும்ப அவர்களது உணர்வில் ஊறிய பாரம்பரியப் பண்பு தான் காரணம்.
பழைய காலத்தில் வேட்டையாடி தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் உணவளிப்பதற்காகவும், பிறரிடம் இருந்து தன்னைக் காத்து, தான் வாழ உத்தரவாதம் தருவதற்கும் பலம் படைத்தவனையே பெண் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
முதலில் எதிர்பார்த்த உடல் பலம் பின்பு பொருளாதாரம் சார்ந்த பின்புலமாகவும் ஆகிவிட்டது. அவள் கடைசி வரை தன்னை பாதுகாத்து பராமரிக்கும் திறன்கொண்ட ஒருவரிடமே தன்னை முழுமையாக ஒப்படைக்க விரும்புகிறாள்.
காலம் இப்போது பெண்களையும் வெகுவாக மாற்றியிருக்கிறது. பெண்கள் சுயமாகச் சம் பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்படியிருந்த போதும் இல்லாதவரை, இயலாதவரை பெண்கள் நாடுவதில்லை. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.
பெண் யாரை விரும்புகிறாளோ அவர் முன்னால் தன்னை கவர்ச்சியாக காட்டிக்கொள்ள விரும்புவாள்.
தன்னை விரும்புகிறவர் பெரும்பாலும் தன்னிடம் உடல் கவர்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார் என்ற உளவியல் ரீதியான உண்மை தெரியவரும்போது, அவரைக் கவர்வதற்காக அலங்கரித்துக்கொள்கிறாள்.
இதற்காகப் பலமணி நேரங்களைக்கூட செலவு செய்கிறாள். அதே நேரத்தில் சமூகத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் தன்னை அலங்கரித்துக்கொள்கிறாள்.
அலங்காரமாக-கவர்ச்சிகரமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பெண்கள் பிறரைக் காட்டிலும் திறன் படைத்தவர்களாக, சுறுசுறுப்பானவர்களாகத் தெரிகிறார்கள். அழகு, பெண்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வெளிஉலகுக்கு காட்டுகிறது.
சோகம், துக்கம், அன்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் பெண்கள் எளி தாக வெளிக்காட்டிவிடுவார்கள் என்பது பொது வான கருத்து.
ஆனால் இந்த அத்தனை உணர்ச்சிகளையும் அடக்கிவைத்துக்கொண்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு.
ஆரோக்கியம், ஆயுள் இரண்டிலும் ஆண்களைவிட பெண் களே முன்னணியில் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆண் பெரும்பாலும் தனது உடல் நலனிலோ, மனநலனிலோ அக்கறை காட்டுவது குறைவு.
ஆனால், பெண் இதில் இருந்து மாறுபட்டவள். தனக்குப் பிரச்சினை தரக்கூடியது எதுவெனத் தெரிந்தால் உடனே அதை சரி செய்துகொள்ளக் கூடியவள்.
ஏனெனில், தனக்கு உடல்நலசீர்கேடு வந்துவிட்டால் தன்னைச் சார்ந்த மற்றவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற தவிப்பின் காரணமாக, அவள் நோயில் இருந்து விரைந்து நிவாரணம் பெற முயற்சிப்பாள். அது அவள் நோயை மட்டும் குணமாக்குவதோடு அல்லாமல் வாழ்நாளையும் கூட்டுகிறது.
திருமணத்தின் மூலம் கணவனிடம் தன்னை பெண் ஒப்படைக்கிறாள். அவளது மனஉணர்வுகளையும், உடல் உணர்வுகளையும் கணவர் புரிந்துகொள்ளவேண்டும்.
அவளது உடல்- மன தேவைகள் அனைத்தையும் உணர்ந்து கணவர் நிறைவேற்றிவைக்கவேண்டும். மனைவி தனது ஆசைகளை வெளிப்படுத்தாதபோதும் அதனை குறிப்பால் உணர்ந்துகொண்டு கணவன் நிறைவேற்றிவைக்கவேண்டும்.
அப்படிப்பட்ட கணவரிடம் மனைவி உயிரோடும், உணர்வோடும் கலந்துவிடுகிறாள்.