யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா அச்ச நிலைமை தொடர்பில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

மினுவாங்கொட பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடைமையாற்றுபவருக்கு கொரோணா தொற்று இனங்காணப்பட்டுள்ளது அந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் இருவர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள் அவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் அவர்களோடு தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் எனினும் மக்கள் கொரோணாவில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் மற்றும் முடக்கம் ஏற்பட்டால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் எனவே அதற்கு முன்னேற்பாடாக பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோணா தொற்று ஏற்படாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

குறிப்பாக வீடுகளை விட்டு வெளியில் வரும்போது முகக் கவசங்களை அணிந்து கைகளை நன்றாக கழுவி சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலம் குறித்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் தனியார் மற்றும் அரச பேருந்துகளில் இருக்கை மட்டத்திற்கு பயணிகளை ஏற்றுமாறும் சாரதி நடத்துனர்களை அறிவுறுத்தினார்

Share.
Leave A Reply