மினுவாங்கொடையில் உள்ள ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கும்பத்தினர், இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியே எங்கும் செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வீடுகளிலிருந்து வௌியேறுவதைத் தவிர்க்குமாறும் குறித்த ஊழியர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுவரை கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, வெயாங்கொடை, மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் எனவும் இராணுவத்தளபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply