மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் உருவப்படத்துடன் அவரது மனைவி மேக்னாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட சினிமாவில் முன்னணி நாயகனான வலம் வந்தவருமான சிரஞ்சீவி சார்ஜா. நடிகை மேக்னா ராஜை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேக்னா தமிழில் “காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகையான இவர் கன்னட சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் எதிர்பாராத விதமாக சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
40 வயதை கூட தொடாத அவரின் இழப்பு குடும்பத்தினரையும், ரசிகர்களையும் நிலைகுலைய செய்தது.
அந்த சமயம் தான் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியும் வெளியானது. சிரஞ்சீவி தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை நண்பர்கள் சிலரிடம் மட்டும் அப்போது பகிர்ந்துள்ளார்.
அவரது மறைவை அடுத்து குடும்பத்தினர் அனைவரும் சோகமாக இருந்த சமயம், மேக்னா தனது இன்ஸ்டாவில் கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வெளியிட்டார்.
அதில், “உங்கள் குழந்தையை ” என் அன்பான சீரு , சீரு என்றால் எப்போதுமே கொண்டாட்டம் தான். உன்னால் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
அவர் எனக்கு கொடுத்தது விலைமதிப்பில்லாதது. ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பியது போன்று குழந்தைக்காகவே காத்திருக்கிறோம். சீரு நம் குழந்தையை புன்னகையுடன் கையில் ஏந்த காத்திருக்கிறேன்.” என்று எழுதியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மட்டும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
சிரஞ்சீவியின் நினைவாக அவரது உருவப்படமும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இடம்பெற்றிருந்தது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் மேக்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.