அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது தந்தையுடன் தகாத உறவைப் பேணுவதற்காகவும் அவரை திருமணம் செய்வதற்காகவும் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
31 வயதான அமண்டா மெக்ளர் எனும் இப்பெண்ணுக்கு 40 வருட சிறைத்தண்னை விதித்து கடந்த வாரம் நீதமன்றம் தீர்ப்பளித்தள்ளது.
இப்பெண்ணின் கணவரான, மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் மெக்கய்ர் எனும் 38 வயது நபர் கடந்த வருடம் காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
இக்கொலையை ஜோன் மெக்கய்ரின் மனைவியான அமண்டா மெக்ளர், அமண்டாவின் தந்தை லறி மெக்ளர் (55) மற்றும் அமண்டாவின் சகோதரி அனா மேரி சௌதரி ஆகியோர் இணைந்து கொலை செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டது.
இக்கொலை நடந்து 3 வாரங்களின் பின்னர், 2019 மார்ச் 11 ஆம் திகதி அமண்டா மெக்ளரும் அவரின் தந்தை லறி மெக்ளரும் திருமணம் செய்துகொள்வதற்காக வேர்ஜீனியா மாநிலத்துக்குச் சென்றனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த லறி மெக்ளர், கடந்த நவம்பர் மாதம் மேற்படி கொலையை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, லறி மெக்ளர் கடந்த ஏற்கெனவே தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் அமண்டா மெக்ளரும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இக்கொலைக்காக தனது முன்னாள் கணவரின் தாயாரிடம் நீதிமன்றத்தில் வைத்து அமண்டா மெக்ளர் மன்னிப்பு கோரினார்.
‘எனது குடும்பத்தினர் என்னை இந்த வழியில் வளர்க்க வில்லை. ஜோன் மெக்கய்ரின் குடும்பத்தினரை மாத்திரமல்லாமல், எனது குடும்பத்தினரையும் நான் புண்படுத்தியுள்ளேன்’ என அமண்டா கூறினார்.
அவருக்கு 40 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமண்டாவின் சகோதரி அனா மேரி சௌதரியும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்ததக்கது.