மரண தண்டனை விதிக்கப்பட்ட கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வா அமர்வுகளில் கலந்துகொள்ளவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியற்றவர் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் செயலாளருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, மரண தண்டனை விதிக்கப்பட்ட வஜிர தர்ஷன டி சில்வா ஒக்டோபர் 08 ஆம் திகதி கஹவத்த பிரதேச சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வாவிற்கு ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனையும் 47 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அதே நாளில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மரண தண்டனை கைதி மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதுடன் தற்போது மேன்முறையீடு செய்த கைதியாக வெலிகடைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் அத்தகைய கோரிக்கைக்கான ஏற்பாடுகள் இல்லை என்பதால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை வழங்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply