சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோது அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் வளைகாப்பு நடத்தப்பட்டது.

அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழச்செய்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், பிரபல ஓவியரும், கிராபிக் டிசைனருமான கரண் ஆச்சார்யாவிடம் ரசிகர் ஒருவர், மேக்னா ராஜின் வளைகாப்பில் சிரஞ்சீவி சர்ஜா இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து தருமாறு கேட்டிருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று தனது கைவண்ணத்தை காட்டிய  கரண் ஆச்சார்யா, கர்ப்பிணி மனைவியை சிரஞ்சீவி சர்ஜா கைதாங்கலாக கூட்டிச் செல்வது போல் தத்ரூபமாக எடிட் செய்து அசத்தி உள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share.
Leave A Reply