ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொவிட்19 நோயாளி, கைது செய்யப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயதான மேற்படி நோயாளி நேற்றிரவு ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்..
அவர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.