மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் 1,022 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் தற்போ‍தைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,442 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எட்டுப் பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,274 ஆக பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply