திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்த மதுரை போலீஸ்காரர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் 20 வயது பெண் ஒருவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் மதுரையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் திருமுருகன் (வயது28) என்பவர், “நான் கல்லூரியில் படிக்கும் போது என்னிடம் ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்துள்ளார்.
நான், எனது குடும்பத்தினருடன் திருமுருகனின் வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினோம்.
அதற்கு அவரும், அவருடைய பெற்றோரும் சேர்ந்து 50 பவுன் நகை கொண்டு வந்தால்தான் திருமணம் செய்து வைக்க முடியும் என கூறினர்.
எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்றல் விசாரணை நடத்தி, போலீஸ் காரர் திருமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.