இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 70 ஆயிரத்து 824 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 69 இலட்சத்து 3 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 967 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 இலட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ள அதேவேளை 8 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Share.
Leave A Reply