கொரேனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலகின் பல பகுதிகளில் பரவியது. நாங்கள்தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிவித்தோம் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. வுகானில் உணவிற்காக விலங்குள் விற்பனை செய்யப்படும் ஒரு மார்க்கெட்டில் இருந்து வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனோடு மட்டுமல்லாமல், ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளிப்பட்டது எனவும் குற்ற்சாட்டு உள்ளது.
இதனால் உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே உலகின் பல்வேறு இடங்களில் இந்த வைரஸ் உருவாகியது.
ஆனால் நாங்கள் மட்டுமே நோய்க்கிருமியை கண்டறிருந்து, அதுகுறித்து வெளியே தெரிவித்து, முதலில் நடவடிக்கை எடுத்தோம். மேலும், அதன் மரபனு வரிசையை உலகத்துடன் பகிர்ந்து கொண்டோம். கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்படுவதற்கு முன் வுகானில் கண்டறியப்பட்டது என்பதை நாங்கள் மறுக்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது.