ஐதராபாத்தில் 55 வயது மதிக்கத்தக்க மாமியாரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மாமியாரை வீட்டுக்கு வெளியே தெருவில் வைத்து அடித்து துன்புறுத்தி, அவரது ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் இருக்கும் மல்லேபள்ளி என்ற இடத்தில் கடந்த 8-ம் தேதி அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:

மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சண்டை இருந்து வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் மாமியார், மருமகள் இருவரும் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர். கீழ் வீட்டில் மாமியார் குடியிருந்து வருகிறார்.

மேல் மாடியில் இருக்கும் தனது மருமகளின் இல்லத்திற்கு செல்லும் தண்ணீரை மாமியார் நிறுத்தி இருக்கிறார். இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உஸ்மா பேகத்தின் கணவர் உபைத் அலி கான் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

கடந்தாண்டு தான் இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது. போலீசார் தற்போது மாமியார், மருமகள் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் தனது கணவருடன் பேசுவதற்கு மற்றும் அவருடன் செல்வதற்கு மாமியார் அனுமதிப்பதில்லை என்று மருமகள் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், 55 வயது மதிக்கத்தக்க மாமியார் தஸ்நீம் சுல்தானாவை மருமகள் உஸ்மா பேகம் தொடர்ந்து அடிக்கிறார்.

முகத்தில் அறைகிறார். இதற்கு முன்னதாக, மாமியார் தஸ்நீமை உஸ்மாவின் தாய் அஷிபா பேகம் அடித்துள்ளார். பின்னர்தான் மருமகளும் இணைந்து மாமியாரை அடித்துள்ளனர் என போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply