பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சரக்கு செயற்பாட்டுப் பிரிவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியருக்கு, இன்று (திங்கட்கிழமை) காலை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பணியாற்றிவரும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததாகத் தெரிவித்து மொரட்டுவவில் உள்ள மெடிஹெல்ப் மருத்துவமனை கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிகமாக மருத்துவமனை வளாகத்தை மூடுவதுடன், அங்குள்ள அனைத்து ஊழியர்களையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply