சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய லட்சுமி மேனன், தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த வருகிறார்.

சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்நிகழ்ச்சி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

லட்சுமி மேனனின் இன்ஸ்டாகிராம் பதிவு

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு இல்லை என பதிலளித்த லட்சுமி மேனன், கூடவே ஹார்டின் சிம்பலையும் பதிவிட்டுள்ளார்.

அதே போல, திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க? என மற்றொரு ரசிகர் கேட்க, அது ஒரு மிகைப்படுத்தப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார்.

தற்போது நடிகை லட்சுமிமேனன் தான் சிங்கிளாக இல்லை என கூறி இருப்பதால், அவரது காதலர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply