நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் அனைவரும் காய்ச்சல் காணரமாக கொழும்பு வைத்தி யசாலைக்கு அனுப்பப்பட்டதாக நீர் கொழும்பு மாநகர சபை மற்றும் சுகா தாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

புனித ஜோசப் தெரு, பிடிப்பன, உப்பலம, முன்னக்கரய மற்றும் கட்டுவாபிட்டிய ஆகிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

 

வத்தளையில் 18 பேருக்கு கொரோனா

வத்தளைப் பிரதேசத்தில் 18 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வத்தளை, ஹெந்தல, போப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அடையளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால், குறித்த பகுதியில் 85 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள் ளன.

 

மத்துகமவில் 4 பேருக்கு கொரோனா!

களுத்துறை – மத்துகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, சொகுசு பஸ் உரிமையாளர், அதன் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஆகியோரே இவ்வாறு அடை யாளம் காணப்பட்டுள்ளதாக மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

பஸ் உரிமையாளரின் மனைவி மத்துகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். குறித்த அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply