தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த படத்தை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இக்குறும்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருந்தது.

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘96’, ஆகிய படங்களின் காட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதற்கு ‘டூ இன் ஒன்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது.

Share.
Leave A Reply