கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை குழந்தையின் புதிய வரவு உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் குழந்தை உணர்த்துகிறது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனாலும், அதில் இடம்பெற்ற மருத்துவர் சமீர் சியெய்ப் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் என்பதும் இந்த குழந்தையின் படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் என்பதையும் அறிய

அந்த படத்தின் குறிப்பில், விரைவில் நாம் எல்லோரும் முக கவசத்தை கழற்றப்போகிறோம் என்பதன் அறிகுறியே இது என்று மருத்துவர் சமீர் சியெய்ப் கூறியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த சமூக ஊடக பயனர்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் லைக் கொடுத்து வருகின்றனர். பலர் இதை 2020ஆம் ஆண்டின் எதிர்கால அடையாளம் என அழைக்கிறார்கள்.

Share.
Leave A Reply