நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 42 பேரும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,014 ஆக அதிகரித்துள்ளது.