பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, தற்போது அவரை அடித்து துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கொண்டாட நடிகை வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு போதையில் வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.
இந்த தகவலும் பரபரப்புக்காக கூறப்பட்ட ஒன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து வந்த நிலையில், இது அனைத்தும் உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்தர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பீட்டர் பால் – வனிதா பிரிவு குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆமா… உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி(பீட்டர் பால்) என பதிவிட்டுள்ளார்.