குளியாப்பிட்டியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மேலும் 14 பேர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
குளியாட்பிட்டி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 25 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் இன்று வெளியானவேளை மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே மணமகன் உட்பட 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் குளியாப்பிட்டியில் உள்ள சில கிராமங்களை முடக்கியுள்ளனர்.