முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாக இருப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் உட்பட ஏழு போர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிஷாட் மறைந்திருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் இன்று காலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.30 மணியவில் தெஹிவளை எபனேசர் பிளேஸில் வைத்துக் கைதான ரிசாட் ததியுதீனின் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

Share.
Leave A Reply