கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அவருடன் பணிப்புரிந்த ஏனைய 11பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.