மினுவாங்கொடையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்ற பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவில் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்ட எவரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது பிசிஆர் சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்காலிக முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் பொதுமக்களை சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply