பாரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France மாகாணமும் ஏனைய 8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன.
பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கொரோனா தொற்று தணிவடையாவிடின் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இரவு நடமாட்டம் முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது.
மிக அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிகளுடன் ஊரடங்கு வேளைகளில் வெளியே சென்று வருவோரை விட கட்டுப்பாட்டை உதாசீனம் செய்பவர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக பிரான்ஸில் கொரோனா தொற்று நாள்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களைத் தாக்கிவருகிறது.
வைத்தியமனைகள் நிரம்பி வருகின்றன.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்புகின்றன.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் ஒக்டோபர் 19ஆம் திகதி நூற்று நாற்பத்தாறு பேரும் 20ஆம் திகதி 163 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
தொற்றாளர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடைய வேண்டும்.
அவ்வாறு நிகழ வில்லை எனில் குறிப்பாக பரிஸ் பரிஸ் புறநகர் பகுதி உள்ளிருப்பு நடவடிக்கைக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகி விடும் என தகவல் கசிந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையினால் பெருமளவில் உணவகங்கள் பாதிப்படைந்துள்ளன.
உணவகங்களில் அதிகமான வாடிக்கையாளர்கள் இரவு வேளையிலேயே உணவு அருந்துவார்கள். அது நின்று போய்விட்டது.
சிறிய மளிகைக் கடை வியாபாரிகள்:
இவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேலே தான் வியாபாரமே நடைபெறும்.
பெரிய அங்காடிகள் மூடப்பட்ட பின்னர் அவசரத் தேவைகளை மக்கள் இந்த சிறிய மளிகைக் கடைகளில் பூர்த்தி செய்வார்கள்.
இப்பொழுது இந்தச் சிறிய மளிகைக் கடைகளும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.
இவ்வாறு இரவு நேரத்து வியாபாரங்கள் வீழ்ச்சிடைந்துள்ளன.
இது வியாபாரிகளின் குறைபாடாக இருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனாவைத் தோற்கடிக்க வேண்டும் என அரசாங்கம் திட்டமிடும் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ், பாரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France, ஏனைய 8 மாநகரங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது 19300 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூன்று நாட்களில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் சோதனையின்போது 3019 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர்.
தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடந்த மக்கள் அனைவருக்கும் உள்துறை அமைச்சர் Gerald Darmanin நன்றி தெரிவித்துள்ளார் .
கடந்த 17ம் திகதி சனிக்கிழமை முதல் அமுலிக்கு வந்த ஊரடங்கு உத்தரவை மதித்து மக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
12 ஆயிரம் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஊரடங்கு உத்தரவு 4 வாரங்கள் அமுலில் இருக்கும்.
தினமும் இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை முதல் தடவை மீறும் ஒருவருக்கு 135 யூரோ தண்டம் விதிக்கப்படும்.
அதே தவறை மூன்று தடவைகள் அவர் மேற்கொண்டால் அவருக்கு 3,750 யூரோ தண்டமும் 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
அதிபரின் மனைவி தனிமைப்படுத்தல்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron அவர்களின் மனைவி Brigitte Macron தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதி கொரோனா தொற்றுடைய ஒருவரை இவர் சந்தித்திருந்தார் என்பதனாலேயே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
Corona தொற்று தொடர்பான எந்த சமிஞ்சைகளும் இல்லாத பொழுதும் கொரோனா தொற்றுடைய ஒருவரை சந்தித்தமை காரணமாகவே Brigitte Macron அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளார்.