மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு அதனை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததையடுத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்களின் ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை போலி ஏ.டி.எம்  காட்டுடன் இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் அங்குள்ள வங்கியின் ஏ.டி.எம் காட்மூலம் பணம் பெறச் சென்றுள்ளார் அவருக்கு ஏ.டி.எம்  இயக்கி பணம் தெரியாத நிலையில் அங்கு நின்ற குறித்த நபர் அவருக்கு உதவுவது போல அவரின் ஏ.டி.எம்  காடட் மூலம் ஏ.டி.எம்  இயந்திரத்தில் 4 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்

இந்த நிலையில் அவரின் வங்கியில் இருந்த 1 இலச்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மாயமாகியுள்ளது. இதனையடுத்து அவர் வங்கிக்கு சென்றபோது அவர் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் ஊடாக காத்தான்குடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது .

இதனையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிசார் காத்தான்குடிபிரதேசத்திலுள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திலுள்ள சிசிடி கமராவில் பணத்தை மோசடி செய்தவைரை கண்டுபிடித்து கைது செய்தனர்

Share.
Leave A Reply