அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் இன்றிரவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 221 பேர் மட்டுமே இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஐ.தே.க. மற்றும் ஞானசார தேரரின் கட்சி என்பன தமது தேசியப் பட்டியல் உறுப்பினரை இதுவரையில் தெரிவு செய்யவில்லை. அதனைவிட சபாநாயகர், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் 221 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தார்கள்.
மைத்திரிபாலவை தலைவராகக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவை நேற்றிவு எடுத்தது. ஆனால், 19 ஆவது திருத்தத்தை கடந்த நல்லாட்சியில் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் ’20’ ஐ தன்னால் ஆதரிக்க முடியாது என மைத்திரி இன்று காலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.