மட்டக்களப்பு – வெள்ளாவெளிப் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா இன்று இந்தத் தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெள்ளாவெளிப் பகுதியில் 13 வயது சிறுமியை அம்பாறையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்(21 வயது) சுற்றிவளைப்புக் கடமையின் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால், 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.