திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரை சடலமாக மீட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் இன்று (23) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனதா மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய. ஜி.ஆர்.சமன்குமார   என்ற இளைஞரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டு முற்றத்திலுள்ள கொங்கிரீட் தூண் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று(23) அதிகாலை வேளையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டுள்ளதாகவும், தான் திருமணம் செய்யவுள்ள பெண் வேறொருவரை காதலித்து வருவதை அறிந்து மன விரக்தியில் இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் அதிகாலை 5.00 மணியளவில் கதவினை திறந்த போது வீட்டு முற்றத்தில் தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தற்கொலை செய்து கொண்டவரின் தந்தை பொலிஸாரிடம் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சடலத்தினை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டதன் பின்பு பிரேத பரிசோதனைக்கு கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply