இலங்கையில் ஒரே நாளில் 866 பேர் கொவி்ட்-19 கொ ரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திவுலபிடிய – பேலியகொட கொவிட் கொத் தணியில் 865 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 தாண்டியது.
பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற் றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 535 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேர், காலி மீன்பிடி துறைமுகத்தில் 5பேர் ஆகியோர் நேற்றைய தினம் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேரும் மற்றும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 257 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் நேற் றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் தற்போது கொரோனா தொற்றளர் களின் மொத்த எண்ணிக்கை 7153 ஆக உயர்ந்துள்ளது.
திவுலபிடிய- பேலியகொட கொவிட் கொத்தணியில் 3682 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது 3495 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றாளர்கள் 3644 பேர் வைத்தியசாலை யிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.