பிரான்சிஸ் 46 மில்லியன் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை முதல் இரவு 9.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரை மேலதிகமாக 38 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வரும் வகையில் இந்த புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்பொழுது 54 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிரான்சில் அமுலில் உள்ளது.

கடந்த 15 நாட்களில் பிரான்சில் கொரோனா தொற்று இரட்டிப்பாகியுள்ளது.

கொரோனா தொற்று 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த ஆறு வாரங்களில் மூன்று மடங்காகி உள்ளது.

இதனாலேயே மேலதிகமாக 38 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை 6 வாரங்களுக்குத் தொடரும் என்றும் பிரதமர் Jean Casteix தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் 40 622 கொரோனா தொற்றுகள் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ளன!

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

Île-de-France மாவட்டத்தில் வைத்தியமனைகளில் 62 வீதமான தீவிரசிகிச்சைப்பிரிவு படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி உள்ளன.

ஒக்ரோபர் மாத இறுதியில் 70 முதல் 90 வீதம் வரையான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் நிரம்பிவிடும் என அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply