கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தங்கி இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிடிபட்டார்.

அவர் பின்னர் அவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

“குறித்த நபர் கொழும்பு பேலியகொடை மீன் சந்தை பகுதியில் வேலை செய்து வந்து நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பி வந்து மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் அதிகம் பாதீக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தார் என்ற நிலையில் குறித்த நபர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகல்களுக்கு அமைவாக தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த நபர் கந்தக்காடு வைத்தியசாலைக்கு சகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் தேடி அறியும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகிறது” என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply