கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு இரண்டு வாரகாலத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகளை வழங்கவும், ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 5000 ரூபா நிவாரண நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்  போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட்-19 வைரஸ்  முதல் சுற்று தாக்கத்தின் போது முன்னெடுக்கப்பட்ட சேவை நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மின்சாரம், நீர், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட தலைவர்கள், சுகாதார சேவையாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதெ குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 2 வார காலத்துக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை வழங்கவும்,

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக  முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.

 

Share.
Leave A Reply