அமெரிக்காவில் தன்னை விரட்டியவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மூஸ் வகை மானொன்று நீரின் மேற்பரப்பில் ஓடுவது போன்ற வீடியோவானது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மான் இனங்களில் மிகப் பெரியதான மூஸ் வகை மான்கள் அலாஸ்காவில் அதிகம் காணப்படுகின்றன.

அந்தவகையில் 500 கிலோகிராம் எடைகொண்ட குறித்த மான் ஆய்வுக்காக சிலர் படகில் சென்ற போது, அவர்களைக் கண்டு அச்சமடைந்து அசுர வேகத்தில் ஓடியது.

குறைந்த ஆழம் கொண்ட நீரில் ஓடினாலும், எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் அந்த மான் நீரின் மேற்பரப்பில் ஓடுவது போல பதிவாகியுள்ளது.

இந் நிலையில் குறித்த வீடியோவானது தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply