அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலானது இன்றைய தினம் நடைபெற்றுவருகின்றது.

இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் (Joe Biden) களமிறங்கியுள்ளனர்.

அந்தவகையில் 2ஆவது முறையாக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரங்களில் அவ்வப்போது நடனமாடி மக்களை உற்சாகப்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில் தனது பிரசார நடனங்களை தொகுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இவ் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply