பாணந்துறைக் கடலில் நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கிய திமில கூட்டத்தில் மூன்று திமிங்கிலங்கள் இறந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திமிங்கிலங்கள் குறிப்பாக குடும்பமாக இருப்பதுடன் அதில் ஒரு திமிங்கிலம் கரையொதுங்கினால் ஏனைய திமிங்கிலங்களும் அதனை பின்தொடருமென கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திமிங்கில கூட்டத்தை ஆள்கடல் பகுதியில் விடுவிப்பதற்காக கடற்படை, விலங்கின அமைப்புகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேற்று இரவு முதல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பல மணிநேர மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் இன்று காலை மூன்று சடலங்கள் கரை ஒதுங்கியதாகவும் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.