அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜோ பிடன் 223 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 212 இடங்களிலும் வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கெண்ணும் பணி ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் மொத்தமுள்ள 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றி பெறுபவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

தற்போதைய நிலைவரப்படி வாக்கு எண்ணிக்கையில், ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். அதாவது ஜோ பிடன் 223 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 212 இடங்களிலும் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply